தொடரும் கனமழை... நெல்லை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடு கிடு உயர்வு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக் 28ம் தேதி தொடங்கியது. அன்று முதல் நெல்லை மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இரவு முதல் நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடித்து நொறுக்கும் கன மழையால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதிகமாக பாபநாசம் அணையில் 96 மிமீ மழை பதிவாகியுள்ளது. சேர்வலாறு அணைப்பகுதியில் 54 மிமீ மழையும், ராமநதி அணைப்பகுதியில் 80 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
இந்த கனமழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 76.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2261.28 கன அடி தண்ணீர் வருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 95.21 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 62.85 அடியாக உள்ளது. அனைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் வருகிறது.
குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவான 36.10 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. கடனா நதி அணை நீர்மட்டம் 67 அடியாக உள்ளது.
அடவி நயினார் அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. நெல்லை மாவட்ட தாலுகாவில் அம்பையில் 43, ஆய்க்குடி 5.2, சேரன்மகாதேவி 17, நாங்குநேரி 46, பாளையங்கோட்டை 50, ராதாபுரம் 14, செங்கோட்டை 27, தென்காசி 11, நெல்லை 7, ஆலங்குளம் 2.2, விகேபுதூர் 2.2 மிமீ என மழை பதிவாகியுள்ளது.
-
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications