ரஜினி கட்சிக்கு பெயர், சின்னம் ரெடி.. எப்போது அறிவிக்கிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினியின் அரசியல் வருகை ... முழு பேச்சும் இதோ

  சென்னை: ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயர் எது என்று இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதேபோல் எந்த சின்னத்தில் எதிர்காலத்தில் போட்டியிடுவேன் என்றும் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

  தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. சட்ட மன்ற தேர்தல் 2021ல் தான் நடக்க இருக்கிறது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் 2019ல் நடக்க உள்ளது.

  அதேபோல் அடுத்த வருடம் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே மக்கள் மத்தியில் தனது சின்னத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் பொங்கல் அன்று தனது சின்னம் குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.

  நிர்வாகிகள்

  நிர்வாகிகள்

  ரஜினி தற்போது தொடங்கி இருக்கும் அரசியல் கட்சிக்கு இன்னும் சில நாட்களில் மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ரசிகர் மன்றத்தில் நீண்ட காலமாக இருக்கும் நபர்களுக்கு ரஜினி முக்கியத்துவம் கொடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இப்போது மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளே கட்சிக்கு நிர்வாகிகளாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

  முடிவாகிவிட்டது

  முடிவாகிவிட்டது

  தற்போது இந்த சின்னம் மற்றும் கட்சியின் பெயர் குறித்து ஏற்கனவே முடிவாகிவிட்டதாக பலரும் கூறுகிறார்கள். மக்கள் மத்தியில் எளிதாக பதியும் வகையில் சின்னம் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர். அதேபோல் கட்சியின் பெயரும் அரசியல் கொள்கைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

  என்ன சின்னம்

  என்ன சின்னம்

  ரஜினி தனது ரசிகர்களை சந்தித்த அரங்கத்தில் அவருக்கு பின் பெரிய வெள்ளை நிற பூ ஒன்று இருந்தது. பெரும்பாலும் அந்த சின்னம் கட்சியின் சின்னமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதே சமயத்தில் ரஜினி தனது ரசிகர்களிடம் பாபா சின்னத்தை காட்டியதன் காரணத்தால் அது சம்மந்தப்பட்ட சின்னம் கூட கட்சியின் சின்னமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

  அறிவிப்பு எப்போது

  அறிவிப்பு எப்போது

  கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பு வரும் பொங்கல் அன்று இருக்கும் என்று கூறப்படுகிறது. பொங்கல் அன்று காலை பெரும்பாலும் ரஜினி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி கட்சியின் பெயர் மற்றும் சின்னம் குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajini announced his political entry. Rajini may announce his party symbol and name on Pongal festival.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற