For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தியானம் செய்வதற்கான இடம் பொது மேடை இல்லை... விஜயேந்திரருக்கு தீபா 'பொளேர்' அட்வைஸ்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் தியானம் 2.0 என பதிவு செய்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை : ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் , எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான ஜெ.தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் தியானம் 2.0 என டுவிட்டீயுள்ளார். மேலும் தியானம் செய்வதற்கான இடம் பொது மேடை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ்- சம்ஸ்கிருதம் அகராதி நூல் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சி தொடங்கியபோது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. ஆளுநர் உள்பட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஆனால் அவர் காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காமல் கண்களை மூடிக் கொண்டிருந்தார். இது சர்ச்சையை கிளப்பியது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக சங்கர மடம் விளக்கம் அளித்துள்ளது.

தியானம் 2.0

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஜெ.தீபா தற்போது டுவிட்டர் மூலம் ஒருவரை விமர்சனம் செய்துள்ளார். இன்று அவர் டுவிட்டரில் போட்ட பதிவில் தியானம் 2.0 என மட்டும் பதிவிட்டிருந்தார்.

தமிழ்த்தாயின் குரல்

இதேபோல் அவர் தனது அடுத்த டுவீட்டில் மதங்களுக்கு அப்பாற்பட்டது தேசப்பற்று , தியானம் செய்வதற்கான இடம் பொது மேடை இல்லை. தமிழ்த்தாயின் குரல் இனி ஓங்கி ஒலிக்கும், தியானம் கலைப்பீராக.. என்று அறிவுறுத்தியுள்ளார் தீபா.

முதல் தியானம் எது?

முதல் தியானம் எது?

ஜெயலலிதா மறைந்த பிறகு, முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட சசிகலா, முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்ய கோரியுள்ளார். அதன்படி தனது பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் திடீர் ஞானோதயமாக ஒரு நாள் இரவு ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து கொண்டு தியானம் செய்யத் தொடங்கினார். பின்னர் தன்னை சசிகலா கும்பல் மிரட்டி பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக கூறியிருந்தார்.

கேலி பொருள்

கேலி பொருள்

இது அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் கேலி பொருளாக்கப்பட்டது. ஓபிஎஸ் செய்த தியானத்தை தியானம் 1.0 வாக கருதி விஜயேந்திரரின் தியானத்தை 2.0 என விமர்சனம் செய்துள்ள தீபாவின் ஹூமரஸ்ஸை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். அதுசரி தீபா மேடம், நீங்கள் ரொம்ப நாளாக ஆழ்நிலை தியானத்துலயே இருக்கீங்க... சீக்கிரம் வெளியே வந்து அதிரடி காட்டுங்க....

English summary
J.Deepa tweets as Thiyanam 2.0.It seems that she criticises indirectly about Vijayendrar who was in meditation when Tamil Thaai Vazhthu was played in a function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X