For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் 2 பாஸா.. 10 பைசா செலவில்லாமல் படிப்பு+ வேலைவாய்ப்பு .. சென்னை கலெக்டர் அழைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022 23 ம்ஆண்டுகளில் 12 ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பிஎஸ்சி, பிகாம், பிசிஏ, பிபிஏ படிக்க வழி வகை செய்யப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி அறித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியல் அமர்தஜோதி வெளியிட்ட அறிக்கையில், "தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக 2022 23 ம்ஆண்டுகளில் 12 ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு பிஎஸ்சி, பிகாம், பிசிஏ, பிபிஏ படிக்க வழி வகை செய்யப்படும்.

Degree with placement at HCL for Adi Dravidian and Tribal students: Chennai Collector invites

அதுமட்டுமின்றி, ஹெச்சிஎல்டெக்னாலஜியில் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானி கல்லூரியில் பிஎஸ்சி கணினி வடிவமைப்பு பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தராபல்கலைக்கழகத்தில் பிசிஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பிசிஏ, பிகாம், பிபிஏ மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு சேர்ந்து படிக்க, வாய்ப்பு பெற்று தரப்படும்.

12 ம் வகுப்பு 2022 ல் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ல் முடித்தவர்கள் 75 சதவீதம் குறைந்தபட்ச மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஹெச்சிஎல் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்புக்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

Degree with placement at HCL for Adi Dravidian and Tribal students: Chennai Collector invites

இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணைதள முகவரியில் விண்ணப்பித்து மாணவர்கள் பயனடைய வேண்டும்" இவ்வாறு கலெக்டர் அமர்தஜோதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தினை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

English summary
Chennai District Collector Amritajyoti has informed that through the Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation (TADCO) in 2022, the Adi Dravidar and tribal students who have completed their 12th standard will be given the opportunity to study BSC, BCom, BCA, BBA degree with job opportunities in HCL.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X