முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சல் சேர்ப்பு.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு பதில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சலும் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையளிக்க வேண்டும், முதல்வர் மருத்துவ காப்பீட்டில் டெங்குவை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரியபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

Dengue fever has been included in the Chief Minister's health insurance scheme : TN govt

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொசு ஒழிப்பிற்காக 13.95 கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு காய்ச்சலை கண்டறிய தமிழகம் முழுவதும்
ரூ 23.50 கோடியில் 837 ரத்த அணு சோதனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை உறுதிபடுத்த மாநிலம் முழுவமும் 125 சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில வேம்பு குடிநீருக்காக 2 ஆயிரம் கிலோ பொடி இருப்பு உள்ளதாகவும் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கும் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu govt said in high court that dengue fever has been included in the Chief Minister's health insurance scheme. There are 125 test centers across the state to ensure the dengue fever.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற