For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அதிமுக.. எங்கும் டெபாசிட் இழக்காத திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக ஆட்சியைப் பிடித்தும் என்ன புண்ணியம். 2 தொகுதிகளில் அது டெபாசிட்டைப் பறி கொடுத்து அவமானத்தைச் சந்தித்துள்ளது. அதேசமயம், ஆட்சியைப் பிடிக்கத் தவறிய திமுக, ஒரு இடத்தில் கூட டெபாசிட்டைப் பறி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக, அதிமுக அணிகளுக்கு போட்டியாக தேமுதிக - தமாகா - மக்கள் நலக் கூட்டணியும், பாமகவும் கடும் போட்டியைக் கொடுத்தன. அதேபோல நாம் தமிழர் கட்சி, பாஜக ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆனால் நடந்ததோ தலைகீழாக இருந்தது. திமுக, அதிமுகவைத் தவிர மற்ற யாருமே போட்டியிலேயே இல்லாமல் போய் விட்டனர். திமுக, அதிமுகவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியவை பாமகவும், மக்கள் நலக் கூட்டணியும்தான். மற்றபடி மற்ற கட்சிகளால் இந்தக் கட்சிகளுக்குப் பெரிய அளவில் எந்தப் பாதிப்பும் இல்லை.

இரட்டை இலை

இரட்டை இலை

இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை வருவது போல கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. அதாவது தனது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 7 பேருக்கு சீட் கொடுத்த அவர் அவர்களை இரட்டை இலையில் போட்டியிட வைத்தார். மற்ற தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது.

ஆட்சியைப் பிடித்த அதிமுக

ஆட்சியைப் பிடித்த அதிமுக

தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைத்த இடங்கள் 3 ஆகும். ஆனால் அவை இரட்டை இலையில் போட்டியிட்டதால் அவையும் அதிமுக வேட்பாளர்களாகவே கருதப்படும்.

2 தொகுதிகளில் டெபாசிட் காலி

2 தொகுதிகளில் டெபாசிட் காலி

அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும் கூட நிறைய அவப் பெயர்கள் அக்கட்சிக்குக் கிடைத்துள்ளன. பெரும்பாலான தொகுதிகளி்ல மயிரிழையில்தான் இக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதை விடக் கொடுமையாக 2 தொகுதிகளில் டெபாசிட் பறி போய் விட்டது.

விளவங்கோடு

விளவங்கோடு

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு டெபாசிட் போய் விட்டது. விளவங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸின் விஜயதாரணி வெற்றி பெற்றார். இங்கு அதிமுகவுக்கு 4வது இடமே கிடைத்துள்ளது. 2வது இடத்தை பாஜகவும், 3வது இடத்தை சிபிஎம்மும் பெற்றன.

தளி தொகுதியில் 3வது இடம்

தளி தொகுதியில் 3வது இடம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் 3வது இடத்தைப் பிடித்தது அதிமுக. அங்கு இந்தத் தொகுதியிலும் அதிமுகவுக்கு டெபாசிட் பறி போயுள்ளது. மற்ற இடங்களில் அதிமுக தப்பிப் பிழைத்துள்ளது.

திமுகவுக்கு இழப்பே இல்லை

திமுகவுக்கு இழப்பே இல்லை

இந்தத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடிக்க மட்டும்தான் தவறியதே தவிர பெருமைக்குரிய விஷயங்கள் நிறையவே அதற்கு உள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் மயிரிழையில்தான் அது தோல்வியைத் தவற விட்டுள்ளது. அதை விட முக்கியமாக எங்குமே அது டெபாசிட்டைப் பறி கொடுக்கவில்லை என்பது முக்கியமானது.

English summary
Despite captured the power again, the ruling party ADMK has lost deposit in 2 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X