For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதியில் பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட பக்தர் கோமாநிலையில் மரணம் - வீடியோ

திருப்பதியில் பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட பக்தர்கள் கோமாநிலையிலேயே 90 நாட்களுக்குப் பின்னர் மரணமடைந்தார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருப்பதியில் பாதுகாவலர்கள் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற பக்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி 98 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மநாபன். மார்ச் மாதம் தனது‌ குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய திருமலைக்குச் சென்றார். உடைமைகளை ஸ்கேன் செய்யும் இடத்தில் பாதுகாவலர்கள் பத்மநாபனை பிடித்து தள்ளியதாக் கூறப்படுகிறது.

Devotee dies after TTD staff attack

அதனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை, பாதுகாவலர்கள் தாக்கியதாகவும், அதனால் மயங்கி விழுந்த பத்மநாபனுக்கு தேவஸ்தான மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 98 நாட்கள் கோமாநிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பத்மநாபனின் உயிரிழப்புக்கு தேவஸ்தான அதிகாரிகளே காரணம் என்றும், தாக்கிய பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
TTD security employees attacked devotee Padmanabhan.He died in hospital after 98 days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X