For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குலசை தசரா விழா.. பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: பிரபலமான குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா செப் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

இந்தியாவில் மைசூரில்தான் தசரா விழா கோலாகலமாக நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் தான் அதே போன்று பெரிய அளவில் தசரா விழா நடக்கும்.

தசரா விழா பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக 41, 21, 11 நாட்கள் விரதம் இருப்பர்.

முத்தாரம்மன் பாதத்தில்

முத்தாரம்மன் பாதத்தில்

விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கடலில் நீராடி சிவப்பு உடை அணிந்து முத்தாரம்மன் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட துளசி மாலையை அணிந்து விரதம் துவங்குவது வழக்கம்.

பச்சரசி சாதம்

பச்சரசி சாதம்

விரதம் இருக்கும் பக்தர்கள் அந்தந்த ஊர்களில் உள்ள அம்மன் கோயில்களிலோ, அல்லது ஊரின் அருகிலோ குடிசை அமைத்து அங்கேயே தங்கி தினமும் ஒரு நேரம் மட்டும் பச்சரிசி சாதம் சாப்பிடுவர்.

வேடம் அணிந்து

வேடம் அணிந்து

தொடர்ந்து விரதம் இருக்கும் பக்தர்கள் காளி, குறவன், குறத்தி, குரங்கு, புலி, சிங்கம், கரடி, பெண், சிவன் பார்வதி உள்பட பல்வேறு வேடங்களில் ஊர் ஊராக சென்று காணிக்கை வசூல் செய்து சூரசம்ஹாரத்தன்று கோயிலுக்கு வந்து வழிபடுவர்.

செப்டம்பர் 24ம் தேதி

செப்டம்பர் 24ம் தேதி

இந்த வருடம் தசரா விழா செப் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

மகிஷா சூரசம்ஹாரம்

மகிஷா சூரசம்ஹாரம்

திருவிழாவின் முக்கிய நாளான அக்டோபர் 3ம் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் முத்தாரம்மன் கடற்கரை வாளகத்தில் எழுந்தருளி ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷத்துடன் மகிஷா சூரனை வாதம் செய்யும் காட்சி நடக்கிறது.

துளசி மாலை அணிந்து

துளசி மாலை அணிந்து

இந்த தசரா விழாவுக்காக வேடம் அணியும் பக்தர்கள் நேற்று மாலை முதல் துளசி மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.

English summary
Devottees have begun fasting for Kulasai dassara festival, set to begin on September 24.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X