For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்மயுத்தத்திற்கு மாபெரும் வெற்றி.. சசிகலாவிற்கு எதிராக வென்றுவிட்டோம்.. ஓ.பி.எஸ் பேட்டி!

சசிகலா குடும்பத்திற்கு எதிராக நடந்த தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளது என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கோயிலில் தரிசனம் செய்ய சென்றிருந்த ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி- வீடியோ

    மதுரை: சசிகலா குடும்பத்திற்கு எதிராக நடந்த தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளது என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    இன்று அதிகாலையே துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்ய சென்றிருந்தார். அவருடன் சில முக்கிய அதிமுக நிர்வாகிகள் இருந்தனர். அதேபோல் மதுரை மாவட்ட அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் இருந்தனர்.

    Dharmayutham is a successful one against Sasikala says O Paneerselvam

    இந்த நிலையில் கோவிலில் தரிசனம் செய்த பின் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அதில் , அதிமுக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. கட்சியில் இப்போது எந்த குழப்பமும் இல்லை. அமைச்சரவையை மாற்றி அமைப்பது முதல்வரின் தனிப்பட்ட அதிகாரம். அதுகுறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும்.

    அதிமுகவில் விரிசல் என்ற திருநாவுக்கரசர் கூறுவது பகல் கனவு. கட்சி மிகவும் வலுவாக உள்ளது. திருநாவுக்கரசரின் பகல் கனவுக்கு யாரும் விடை சொல்ல முடியாது.

    நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும். அதிமுக கூட்டணியே வெற்றி கூட்டணியாக இருக்கும். கூட்டணி குறித்து விரைவில் பேச்சு நடக்கும்.

    சசிகலா குடும்பத்திற்கு எதிராக நடந்த தர்மயுத்தம் வெற்றி பெற்றுள்ளது. சசிகலாவிற்கு எதிராக அதிமுக வெற்றிபெற்றுள்ளது.

    கமல்ஹாசனின் பேச்சு விநாடிக்கு ஒரு முறை மாறும். அவர் தினமும் மாற்றி மாற்றி பேசுகிறார். அதற்கு பதில் அளிக்க முடியாது, என்றுள்ளார்.

    English summary
    Dharmayutham is a successful one against Sasikala says Deputy CM O Paneerselvam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X