For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரட்டை இலை சின்னம்: ஹைகோர்ட் மதுரை கிளை கதவை தட்டிய தினகரன் தரப்பு

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அவகாசம் தர மறுத்து விட்டதை அடுத்து மதுரை ஹைகோர்ட் கிளையின் கதவை தட்டியுள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய காலஅவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தினகரன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடா்பான இறுதி விசாரணை அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என்றும் அதற்கு தேவையான கூடுதல் ஆவணங்களை தினகரன் மற்றும் பன்னீா் செல்வம் தரப்பினா் செப்டம்பர் 29 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினா்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் கூடுதல் அவணங்களை தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் கோரப்பட்டது.

அவகாசம் வழங்க மறுப்பு

அவகாசம் வழங்க மறுப்பு

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டால் விசாரணை தள்ளிப்போகும். அதுமட்டுமல்லாது உாிய நேரத்தில் தோ்தல் நடத்தப்பட முடியாது என்ற காரணத்தால் அவகாசம் வழங்க தோ்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல்

தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல்

அவகாசம் மறுக்கப்பட்ட நிலையில் தினகரன் தரப்பில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தினகரன் தரப்பில் அவரது வழக்கறிஞா் ராஜாசெந்தூா் பாண்டியன் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளாா்.

3 நாட்கள் அவகாசம் கேட்ட தினகரன்

3 நாட்கள் அவகாசம் கேட்ட தினகரன்

ஆயிரம் பொதுக்குழு உறுப்பினா்களின் பிரமாணப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலரது ஆவணங்களை தாக்கல் செய்ய 3 தினங்கள் அவகாசம் வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரிக்கை

தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரிக்கை

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் சார்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். ஆவணங்களை தாக்கல் செய்த பின்னர், சின்னம் குறித்து முடிவு எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

தேர்தல் ஆணையத்தில் தாக்கல்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தினகரன் சார்பில் 7 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதியன்று தேர்தல் ஆணையத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு தினகரனுக்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
AIADMK Amma leader TTV Dinakaran has filed a pettion in the high court bench Madurai to order the EC to give him time for this submission of additional documents of AIADMK symbol case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X