தினகரனை தடுத்தால் போலீசை சீருடையை கழற்றிவிட்டு ஓடவிடுவோம்: எம்.எல்.ஏ. வெற்றிவேல் பகிரங்க மிரட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அலுவலகம் செல்லும் தினகரனை தடுத்தால் போலீசை சீருடையை கழற்றிவிட்டு ஓடவிடுவோம் என எம்.எல்.ஏ. வெற்றிவேல் பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

தினகரனின் அதிதீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ. வெற்றிவேல் தடாலடியாக தொடர்ந்து எடப்பாடி கோஷ்டியை விமர்சித்து வருகிறார். அமைச்சர் ஜெயக்குமாரை மிகவும் மோசமான வார்த்தைகளால் அர்ச்சித்தவர் வெற்றிவேல்.

இந்நிலையில் சன் நியூஸ் டிவி சேனலுக்கு வெற்றிவேல் அளித்த பேட்டியில் போலீசாருக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். சன் நியூஸுக்கு வெற்றிவேல் அளித்த பேட்டி:

அமைச்சர்களுக்கு சேலை

அமைச்சர்களுக்கு சேலை

சசிகலாவை பொதுச்செயலராக தேர்ந்தெடுத்தவர்கள்தான் அமைச்சர்கள். இந்த அமைச்சர்கள்தான் தமிழக நலன்களுக்காக வாதிடுவார்களா? இவர்களுக்கெல்லாம் சேலை வாங்கி தருகிறேன்... கட்டிக் கொள்ளட்டும்.

திஹாரை பார்த்தவர்..

திஹாரை பார்த்தவர்..

அதிமுக தலைமை அலுவலகம் என்பது எங்களது அலுவலகம். டிடிவி தினகரன் திஹார் சிறையையே பார்த்தவர். சென்னை புழல் சிறையெல்லாம் எம்மாத்திரம்?

யாரும் தடுக்க முடியாது

யாரும் தடுக்க முடியாது

நாங்கள் எங்கள் கட்சி அலுவலகத்துக்கு போவதை யாரும் தடுக்க முடியாது. பொதுமக்களை சந்தித்துவிட்டு எப்போது வேண்டுமானாலும் அதிமுக தலைமை அலுவலகம் செல்வோம்.

போலீஸை ஓட விடுவோம்

போலீஸை ஓட விடுவோம்

அப்படி செல்லும் எங்களை போலீஸ் தடுக்க முடியாது. சட்டம், நீதிமன்றம் இருக்கிறது. அதைமீறி போலீஸ் எங்களைத் தடுத்தால் சீருடையை கழற்றி ஓடவிடுவோம்.

இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK's TTV Dinakaran camp MLA Vetrivel threatened to the Police on Party Head office issue.
Please Wait while comments are loading...