For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரன் என்ன ஐஎஸ் அமைப்பிலா சேர்ந்துள்ளார் தேச விரோத வழக்கு போட?: திவாகரன் பொளேர்

தினகரன் மீது தேசதுரோக வழக்குப்போட அவர் என்ன ஐஎஸ் அமைப்பிலா சேர்ந்துள்ளார் என திவாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரன் என்ன ஐஎஸ் அமைப்பிலா சேர்ந்துள்ளார்?-வீடியோ

    சென்னை:தினகரன் மீது தேசதுரோக வழக்குப்போட அவர் என்ன ஐஎஸ் அமைப்பிலா சேர்ந்துள்ளார் என திவாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள 36 பேர் மீது இந்தியா இறையாண்மைக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கில் டிடிவி தினகரன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது எடப்பாடி அரசின் காழ்ப்புணர்ச்சி என தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    தங்களுக்கு பல இடையூறுகள்

    தங்களுக்கு பல இடையூறுகள்

    இந்நிலையில் சசிகலாவின் சகோதரரான திவாகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கிட்னி மற்றும் கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு உறுப்பு தானம் பெறுவதிலேயே தங்களுக்கு பல இடையூறுகள் இருந்தததாக கூறினார்.

    பரோல் தொடர்பாக ரிட் மனு

    பரோல் தொடர்பாக ரிட் மனு

    சசிகலா இருக்கும் இடமே உண்மையான அதிமுக என்றும் திவாகரன் தெரிவித்தார். மேலும் சசிகலா பரோல் தொடர்பாக ரிட் மனு தாக்கல் செய்வோம் என்றும் அவர் திவாகரன் கூறினார்.

    ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளாரா?

    ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளாரா?

    சசிகலாவை கண்டிப்பாக பரோலில் அழைத்து வருவோம் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் தினகரன் மீதான வழக்குப்பதிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் தேசதுரோக வழக்கு போடும் அளவிற்கு டிடிவி தினகரன் என்ன ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளாரா?என்று கேள்வி எழுப்பினார்.

    நடராஜனிடம் நலம் விசாரிப்பு

    நடராஜனிடம் நலம் விசாரிப்பு

    மேலும் நடராஜனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நடராஜன் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்ற சசிகலா சகோதரர் திவாகரன் இதனை தெரிவித்தார்.

    English summary
    Diwakaran has questioned that Dinakaran has joined in the IS to file case against him. He said we will take out Sasikala in parole definitely.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X