கைது பயத்தில் இருக்கும் தினகரன் சசிகலாவை இன்று சந்திக்கிறாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரன் சசிகலாவை இன்று சிறையில் சந்திக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Dinakaran to meet Sasikala today?

இந்த வழக்கில் தினகரன் கைது செய்யப்படக்கூடும் என்று கூறப்படும் நிலையில் அவர் சசிகலாவை சந்திக்கப் போகிறேன் என்று கிளம்பி நேற்று பெங்களூருக்கு சென்றுவிட்டார்.

சசிகலாவோ தினகரனை சந்திக்க விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். இந்நிலையில் தினகரன் சசிகலாவை இன்று சந்திக்கக்கூடும் என்று கூறப்பட்டது.

பெங்களூரு சிறை விதிமுறைகளின்படி திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்படும். அதனால் சசிகலாவை இன்று தினகரன் சந்திப்பது சாத்தியம் இல்லை என்று கூறப்படுகிறது.

அவர்களின் சந்திப்பு குறித்து சிறை வட்டாரத்தில் இருந்தும் எந்தவித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
According to reports, TTV Dinakaran can't meet Sasikala in Bengaluru jail today as the rules wont allow visitors on tuesdays.
Please Wait while comments are loading...