For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓகி புயல் பாதிப்பு : கன்னியாகுமரி விரைகிறது பேரிடர் மீட்புக் குழு #Ockhi

புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க பேரிடர் மீட்புக்குழு கன்னியாகுமரி விரைந்துள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஓகி புயல் மிரட்டல்- 12 மணிநேரத்தில் வருகிறது- வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ

    கன்னியாகுமரி : ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளது.

    வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயலுக்கு ஓகி என்று பெயரிடப்பட்டு உள்ளது. புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

     Disaster Emergency Team started to kanyakumari from arakonam for Rescue

    சூறைக்காற்றும், பேய் மழையும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிப்பதால் மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

    காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீடுகளில் இருக்கும்படி மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். பல வீடுகளின் மீது மரங்கள் விழுந்து உள்ளதால், மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    எனவே, பாதிப்புக்குள்ளான மக்களை மீட்கவும், புயல் பாதிப்புகளை சீரமைக்கவும் பேரிடர் மீட்புக்குழு கன்னியாகுமரி விரைந்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து 70 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழுவினர் கன்னியாகுமரி கிளம்பி உள்ளது.

    English summary
    Disaster Emergency Team started to kanyakumari from arakonam for Rescue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X