சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வழங்கிய வீட்டுமனை பட்டா... நிம்மதியில் திருநங்கைகள்! - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை, காரைக்குடி பகுதிகளில் வசிந்து வரும் 12 திருநங்கைகளுக்கு அவர்களது கோரிக்கையை ஏற்று வீடுமனை பட்டா வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் திருநங்கைகள் என்பதால் பொதுமக்கள் யாரும் வாடகைக்கு வீடு கொடுக்க முன்வரவில்லை. இதனால் 12 திருநங்கைகள் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்துள்ளனர்.

 District collector Malarvizhi ordered to give patta land to transgenders

அதையடுத்து மாவட்ட ஆட்சியர் மலர்விழியைச் சந்தித்து தங்களுக்கு வீடு அல்லது மனை வேண்டும் என கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் திருநங்கைகளுக்கு வீட்டு மனை பட்டா தர உத்தரவிட்டார். அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் 12 திருநங்கைகளும் பெற்றுக்கொண்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sivaganga district collector Malarvizhi ordered to give patta land to transgenders after hearing their request.
Please Wait while comments are loading...