ஆரணியில் நிலத்தை சேதப்படுத்திய விவகாரம்... தவறு உறுதியானால் டிஎஸ்பி மீது நடவடிக்கை... மாவட்ட நீதிபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நெற்பயிர்களை அழித்து பெயரை கெடுத்துக் கொண்ட டிஎஸ்பி ஜெரினா..வீடியோ

  ஆரணி : ஆரணியில் நிலத்தகராறு காரணமாக பயிரிட்ட நிலத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் டிஎஸ்பியாக இருந்தாலும் அவர் மீது மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி மகிழேந்தி தெரிவித்துள்ளார்.

  ஆரணியை அடுத்த காமக்கூரை சேர்ந்த சாவித்திரி என்பவருக்கும், சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு ஆரணி நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.

  District Magistrate reviews damaged paddy crops issue in Arni

  இந்நிலையில் இந்த பிரச்சினைக்குரிய நிலத்தில் சாவித்திரி நெற்பயிர் வைத்துள்ளதாக சாமுண்டீஸ்வரி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  இந்த விவகாரத்தில் போலீஸார் புகார் அளித்த சாமுண்டீஸ்வரிக்கு ஆதரவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஆரணி டிஎஸ்பி ஜெரினா பேகம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

  டிஎஸ்பி இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி கொண்டிருந்தபோதே சாமுண்டீஸ்வரியின் உறவினர் டிராக்டரை விவசாய நிலத்தில் இறக்கி விளைந்த பயிர்களை அழித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சாவித்திரி ஓடி சென்று டிராக்டரின் குறுக்கே படுத்துக் கொண்டார்.

  எனினும் இந்த சம்பவத்தை ஜெரினா பேகம் தடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புறம்போக்கு இடமாகவே இருந்தாலும் அந்த நிலத்தை அழிக்கக் கூடாது என்பதுதான் சட்டம்.

  இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசாரணை பாரபட்சமின்றி நடைபெறும். தவறு உறுதியானால் ஆரணி டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  District Magistrate Magizhendi says that he will take action against the lands destroyed in the land dispute. Whoever does this wrong will be punished.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X