For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிநாட்டு சொகுசு கார்கள் இறக்குமதி... ஐடி விசாரணை வளையத்தில் திவாகரன் மகள் ராஜமாதங்கி

வெளிநாட்டு சொகுசு கார்கள் இறக்குமதி விவகாரத்தில் திவாகரன் மகள் ராஜமாதங்கியும் சிக்குகிறார் என்கிறது ஐடி வட்டாரங்கள்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: வெளிநாட்டு சொகுசு கார்களை இறக்குமதி செய்தது தொடர்பாக திவாகரன் மகள் ராஜமதாங்கியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

சசிகலா குடும்பத்துக்கு சொகுசு கார்கள் தொடர்பான வழக்குகள் ஒன்றும் புதியதல்ல. 1994-ம் ஆண்டு லெக்சஸ் எனும் சொகுசு காரை இறக்குமதி செய்து ரூ1 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக சசிகலாவின் கணவர் நடராஜன் மீது வழக்கு உள்ளது.

2 ஆண்டு சிறை

2 ஆண்டு சிறை

இவ்வழக்கில் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு நடராஜனுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இத்தீர்ப்பை எதிர்த்து நடராஜன் மேல்முறையீடு செய்தார்.

2 ஆண்டு சிறை

2 ஆண்டு சிறை

இவ்வழக்கில் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டு நடராஜனுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இத்தீர்ப்பை எதிர்த்து நடராஜன் மேல்முறையீடு செய்தார்.

திவாகரன் மகளுக்கு சிக்கல்

திவாகரன் மகளுக்கு சிக்கல்

இம்மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த 10 நாட்களுக்கு முன்னர்தான் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது சசிகலாவின் தம்பி திவாகரன் மகள் டாக்டர் ராஜமாதங்கி சொகுசு கார்கள் இறக்குமதி விவகாரத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜமாதங்கி பெயரில் இறக்குமதி

ராஜமாதங்கி பெயரில் இறக்குமதி

வருமான வரித்துறை அதிகாரிகள் திவாகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய போது சொகுசு கார்களை இறக்குமதி செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன. நிறைய சொகுசு கார்கள் ராஜமாதங்கி பெயரில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

என்ன நடந்தது என விசாரணை

என்ன நடந்தது என விசாரணை

இத்தனை கார்களை இறக்குமதி செய்வதற்கான பணம் எங்கிருந்து வந்தது? என்பது தொடர்பாகத்தான் ராஜமாதங்கியிடம் விசாரணை நடத்துகிறதாம் வருமானவரித்துறை. டாக்டரான ராஜமாதங்கிக்காக இந்த கார்கள் இறக்குமதி செய்யப்பட்டதா? அல்லது அவர் பெயரில் இறக்குமதி செய்யப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்கின்றன வருமான வரித்துறை வட்டாரங்கள்.

English summary
The Income Tax Department official sources said tha Divakaran's daughter Rajamathangi had imported many foreign cars. We are probing the source of funds for those purchases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X