For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளவரசி மகன் விவேக்கு அதிமுக 'து.பொ.செ.' பதவி தரவே கூடாது.. சசியை மிரட்டும் திவாகரன்

இளவரசி மகன் விவேக்குக்கு அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவி தர சசிகலா சகோதரர் திவாகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழை நிர்வகித்து வரும் 'ஜாஸ் சினிமாஸ்' விவேக்கு துணைப் பொதுச்செயலர் பதவியை தரவே கூடாது என சசிகலாவை திவாகரன் தரப்பு மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சசிகலா அதிமுக துணைப் பொதுச்செயலராகி முதல்வராக கனவு கண்டார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனைதான் கிடைத்தது சசிகலாவுக்கு.

ஓரம்கட்டப்பட்ட சசி

ஓரம்கட்டப்பட்ட சசி

சசிகலா சிறைக்குப் போகும் போது தினகரனை துணைப் பொதுச்செயலராக்கினார். அவ்வளவுதான் தினகரன் அதகள ஆட்டம் போட்டார்... ஆர்கே நகர் தேர்தலில் சசிகலா படத்தை கூட பயன்படுத்த தடை விதித்தார்.

சிறையில் தினகரன்

சிறையில் தினகரன்

இப்போது தினகரனும் தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் திஹார் சிறையில் உள்ளார். தினகரன் மீதான ஃபெரா வழக்கிலும் தீர்ப்பு வர இருக்கிறது.

விவேக்குக்கு பதவி

விவேக்குக்கு பதவி

இதனிடையே தினகரனுக்கு எல்லாமுமாக வலம் வந்த இளவரசி மகன் விவேக்கை அதிமுகவின் துணைப் பொதுச்செயலர் அல்லது வேறு ஒரு பதவியில் உட்கார வைக்க சசிகலா முடிவு செய்திருக்கிறார் என தகவல் வெளியானது. இதை கேட்ட திவாகரன் தரப்பு கொந்தளித்து போய்விட்டது.

திவாகரன் எதிர்ப்பு

திவாகரன் எதிர்ப்பு

இது தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு காட்டமாக பதில் அனுப்பியுள்ளதாம் திவாகரன் தரப்பு. அதாவது தினகரனுக்கு பதவி கொடுத்து அவர் போட்ட ஆட்டம் எல்லாம் மறந்துட்டீங்களா? அதேபோல விவேக்கையும் வளர்த்துவிட பார்க்கிறீர்களா? யாருக்கும் எந்த பதவியும் தர வேண்டாம்... எடப்பாடி ஆட்சியே தொடரட்டும்.. திரைமறைவில் இருந்தே ஆட்சியை கண்ட்ரோல் செய்வோம் என்று சசிகலாவை மிரட்டியுள்ளது திவாகரன் தரப்பு.

English summary
Sasikala brother DIvarakaran strongly opposed to give the Deputy General Secretary post to Ilavarasi Son Vivek.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X