For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மரண சர்ச்சை: 'பிராஞ்சு'களைக் காக்க தமிழகத்தையே முட்டாளாக்கினார்களா?.. ஷாக்கிங்!

அப்பல்லோவின் கிளைகளை பாதுகாப்பதற்காக ஜெயலலிதாவின் மரணத்தை ஒருநாள் தள்ளி அறிவித்ததாக திவாகரன் கூறியுள்ளது அதிர வைத்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெ. மரணம் திவாகரனின் திடுக் தகவல்

    சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தையே ஒருநாள் தள்ளி அறிவித்து தமிழக மக்களை முட்டாளாக்கியுள்ளனர். தனியார் மருத்துவமனையான அப்பல்லோவின் பிராஞ்சுகளைக் காக்க இவ்வாறு செய்துள்ளனர் என திவாகரன் கூறியுள்ளது அதிர வைப்பதாக உள்ளது.

    கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்போதய முதல்வர் ஜெயலலிதா. 75 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் டிசம்பர் 4 ஆம் தேதியன்று இதய முடக்கம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

    ஜெயலலிதாவின் நின்று போன இதயத்தை துடிக்க வைக்க எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதியன்று இரவு 11 மணிக்கு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. டிசம்பர் 6 ஆம் தேதியன்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    ஜெயலலிதா மரணம்

    ஜெயலலிதா மரணம்

    ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அவரது மரணத்தில் உள்ள சர்ச்சைகள் தீர்ந்தபாடில்லை. சசிகலா குடும்பத்தினர் தினம் தினம் ஒரு தகவலை வெளியிட்டு வருகின்றனர். ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முன் வீடியோ வெளியான நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று ஒரு தகவலை கூறியுள்ளார்.

    ஞாயிறு மாலையே மரணம்

    ஞாயிறு மாலையே மரணம்

    ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டார் என திவாகரன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். மன்னார்குடியில் எம்.ஜி.ஆர். விழாவில் பேசிய போது இதனை கூறியுள்ளார்.

    மருத்துவமனைக்கு பாதுகாப்பு

    மருத்துவமனைக்கு பாதுகாப்பு

    தொடர்ந்து பேசிய திவாகரன், ஜெயலலிதா இறந்ததை உடனடியாக அறிவிக்கும்படி அப்பல்லோ நிர்வாகத்திடம் முறையிட்டோம் என திவாகரன் கூறியுள்ளார். ஆனால் மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதி செய்தால் தான் அறிவிப்போம் என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆக தனது மருத்துவமனைகளை பாதுகாப்பதற்காக தமிழக மக்களை முட்டாள் ஆக்கியுள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.

    அப்பல்லோ ஆவணங்கள்

    அப்பல்லோ ஆவணங்கள்

    ஜெயலலிதா மரணத்தில் உள்ள சர்ச்சைகள் குறித்து விசாரிக்க அரசு சார்பில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் ஜெயலிலதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், முன்னாள் தலைமைச்செயலாளர் உட்பட பல்வேறு தரப்பினர் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். அப்பல்லோ நிர்வாகவும் இரண்டு சூட்கேஸ்களில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.

    திவாகரன் திடுக்

    திவாகரன் திடுக்

    ஜெயலலிதாவின் நினைவு தினம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் டிசம்பர் 4 ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறியுள்ளார் திவாகரன். இதனால் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விரைவில் திவாகரனுக்கு சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கலாம்.

    English summary
    Sasikala's brother Diwakaran's shocking revelations on Jaya's death date has created big controversy in Tamil Nadu.Apollo hospitals had declared that the Jayalalithaa passed on at 11.30 PM on December 5.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X