For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

100 வயது வரை வாழ்வேன்..மக்களுக்கு நல்லது செய்துவிட்டுதான் என் கட்டை போகும்: விஜயகாந்த் திடீர் பேச்சு

தமிழக மக்களுக்காக நிச்சயமாக ஏதாவது நல்லது பண்ணிட்டுத்தான் என் கட்டை போகும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்: நான் 100 வயது வரை வாழ்வேன். என் மனைவி இருக்கும் வரை எந்த வியாதியும் என்னை அண்டாது. அண்டவும் முடியாது. 100 வயதில் ஒரு நாளாவது நான் தமிழக மக்களுக்காக நிச்சயமாக ஏதாவது நல்லது பண்ணிட்டுத்தான் என் கட்டை போகும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள காயார் கிராமத்தில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். கிராம மக்களுடன் தேமுதிக தொண்டர்களும் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

DMDk leader vijayakanth Condemned on ADMK and DMK partie's

விழாவில் பேசிய விஜயகாந்த், தமிழகத்தில் நீர்நிலைகள் குடியிருப்புகளாக மாற்றப்பட்டதற்கு அதிமுக, திமுக அரசுகள் தான் காரணம் என குற்றம்சாட்டினார். மேலும், பொங்கல் விழா தமிழர்களுக்கான வீர தமிழர் திருவிழாவாகும். வர்தா புயல் பாதிப்பு, வறட்சியால் தமிழகத்தில் விவசாயிகள் அனைவரும் நொந்து போய் உள்ளனர்.

வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது மனைவியும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆகையால்தான் நான் உழவன் மகன் படத்தில் நடித்தேன்.

நான் 100 வயது வரை வாழ்வேன். என் மனைவி இருக்கும் வரை எந்த வியாதியும் என்னை அண்டாது. அண்டவும் முடியாது. 100 வயதில் ஒரு நாளாவது நான் தமிழக மக்களுக்காக நிச்சயமாக ஏதாவது நல்லது பண்ணிட்டுத்தான் என் கட்டை போகும். அதுதான் உண்மை. இவ்வாறு விஜயகாந்த் கூறினார். இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

English summary
DMDK leader Vijayakanth celebrated Pongal festival at Kayar Village in kanchipuram district
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X