For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவும், அதிமுகவும் தோல்வி பயத்தில் ஓட்டுக்கு ரூ. 5000 வரை தருகின்றனர்: அன்புமணி புகார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.500 ம், அதிமுக சார்பில் ஓட்டுக்கு ரூ.1000 மும் தமிழகத்தில் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமாதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ஒரு ஓட்டுக்கு ரூ 5000 வரை கூட வாக்காளர்களுக்கு தரப்படுகிறது என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தோல்வி பயம் காரணமாகவே இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றன. பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற அதிமுக, திமுகவின் கனவு பலிக்காது என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

தேர்தலை நேர்மையாகவும், தூய்மையாகவும் நடத்த வேண்டிய அதிகாரிகளே பண வினியோகம் செய்பவர்களுக்கு துணையாக செயல்படுகின்றனர் என்றும் அதிமுக, திமுக, ஆகிய இரு கட்சிகளையும் புறக்கணித்து விட்டு பாட்டாளி மக்கள் கட்சிக்குத் தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

பணம் பட்டுவாடா

பணம் பட்டுவாடா

2016 ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் பணத்தை பாதாளம் வரை பாயவிட்டுக் கொண்டிருக்கின்றன. இதை தடுக்க வேண்டிய தேர்தல் அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதுடன், பல இடங்களில் பண வினியோகத்திற்கு துணையாக இருக்கின்றனர். ஜனநாயகத்தை மதிக்காமல் பணநாயகத்திற்கு துணை போகும் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

234 தொகுதிகளிலும் பணம்

234 தொகுதிகளிலும் பணம்

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுகவும், அதிமுகவும் போட்டிப் போட்டுக் கொண்டு ஒட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். குறைந்தபட்சமாக திமுக ரூ.500, அதிமுக ரூ.1000 என பணம் வினியோகிக்கப்படுகிறது. முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் இன்னும் பல மடங்கு அதிகமாக பணம் வழங்கப்படுகிறது.

ரூ.5000 வரை ஓட்டுக்கு நோட்டு

ரூ.5000 வரை ஓட்டுக்கு நோட்டு

ஜோலார்பேட்டை தொகுதியில் ரூ.2000, எடப்பாடியில் ரூ.3000 வீதம் அதிமுகவினர் பணத்தை வாரி இறைக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரிலும், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியிலும் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் ஒரு ஓட்டுக்கு ரூ.5000 வீதம் வினியோகித்து வருகின்றனர்.

மின்சாரம் துண்டிப்பு

மின்சாரம் துண்டிப்பு

சென்னை உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து விட்டு பணம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 70 தொகுதிகளில் பண வினியோகம் முடிவடைந்து விட்டது. ஆனால், பண வினியோகத்தில் ஈடுபடும் திமுக, அதிமுக ஆகிய கட்சியினர் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தகைய செயல்களால் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத தன்மையும், ஒரு சார்பு நிலைப்பாடும் அம்பலமாகி விட்டன.

புகார் அளித்தும் பயனில்லை

புகார் அளித்தும் பயனில்லை

தமிழகத்தில் எந்த பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டாலும் அதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியிருக்கிறார்.

அதிகாரிகள் தாமதம்

அதிகாரிகள் தாமதம்

பண வினியோகம் பற்றி எந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும் ஒரு மணி நேரம் கழித்து தான் பறக்கும் படை வருகிறது. அதற்குள் பண வினியோகத்தை முடித்து விடுகின்றனர். பண வினியோகம் குறித்து புகார் வந்தால் தாமதமாகத் தான் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினருக்கு மேலிடத்திலிருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

துணை போகும் அதிகாரிகள்

துணை போகும் அதிகாரிகள்

தேர்தலை நேர்மையாகவும், தூய்மையாகவும் நடத்த வேண்டிய அதிகாரிகளே பண வினியோகம் செய்பவர்களுக்கு துணையாக செயல்படுகின்றனர். பென்னாகரம் தொகுதி ஏரியூரில் பண வினியோகம் செய்த அதிமுகவினரை பா.ம.க.வினர் பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

கடலூரில் பணம் விநியோகம்

கடலூரில் பணம் விநியோகம்

கடலூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.சி.சம்பத் சார்பில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் வினியோகித்து வந்த பணத்தை அத்தொகுதி பா.ம.க. வேட்பாளர் பழ. தாமரைக்கண்ணனும், அவருடன் வந்தவர்களும் பறிமுதல் செய்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்த போதும், பணத்தை வினியோகித்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அதை தடுத்த பா.ம.க வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் நாடகம்

மு.க.ஸ்டாலின் நாடகம்

தேர்தல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கைகள் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாக உள்ளன. அதிமுகவுக்கு இணையாக திமுகவும் பணம் வினியோகித்து வரும் நிலையில், பண வினியோகத்தை தடுக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுப்பது நாடகம் ஆகும். தேர்தலில் பண பலத்தை தடுப்பதில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும், பிற தேர்தல் அதிகாரிகளும் தோல்வியடைந்து விட்டனர்.

அதிகாரிகளும் உடந்தை

அதிகாரிகளும் உடந்தை

தமிழக தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் விரும்பினாலும், தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளாக இருப்பவர்கள் அதிமுகவின் தொண்டர்களைப் போலவே செயல்படுகின்றனர். கோவை தெற்கு தொகுதி தேர்தல் அதிகாரி காந்திமதி, தொண்டாமுத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரி மதுராந்தகி ஆகியோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதிலிருந்தே தமிழகத்தின் கள நிலைமையை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.

தோல்வி பயம்

தோல்வி பயம்

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தோல்வி பயம் காரணமாகவே இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றன. பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற அதிமுக, திமுகவின் கனவு பலிக்காது. இந்த இருகட்சிகளையும் புறக்கணித்து விட்டு பாட்டாளி மக்கள் கட்சிக்குத் தான் மக்கள் வாக்களிப்பார்கள்.

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவை

தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இனியாவது பண வினியோகத்தை தடுக்க வேண்டும். தமிழகத்தின் எந்த பகுதியில் பண வினியோகம் நடந்தாலும், அதற்கு அப்பகுதியின் தேர்தல் அதிகாரியும், காவல்துறை அதிகாரிகளும் தான் பொறுப்பு என்றும், அவர்களை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையம் எச்சரிக்க வேண்டும் என்றும் அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

English summary
PMK CM candidate Dr. Anbumani has said press persons in Dharmapuri, DMK and ADMK have finished money distribution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X