திமுக-பாஜக ட்விட்டர் மோதல் உச்சகட்டம்! இங்க பாருங்க ட்வீட்டுகளை
Recommended Video

சென்னை: திமுக மற்றும் பாஜக நடுவேயான ட்விட்டர் போர் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு தாமதப்படுத்தியதாக கூறி, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஏப்ரல் மாதம், ஆயுத தளவாட கண்காட்சியை துவக்கி வைக்க சென்னை வந்திருந்தபோது, திமுக சார்பில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் ட்விட்டரில் #GobackModi என்று ஹேஷ்டேக் போட்டு தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தனர்.
இதேபோல சமீபத்தில் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்த சென்னை வந்தபோது #GobackAmitShah என்று திமுகவினரும், பாஜக எதிர்ப்பாளர்களும் ட்ரெண்ட் செய்தனர்.
இந்த நிலையில், கோபத்தில் இருந்த பாஜக ஆதரவாளர்கள், லண்டனில் இருந்து தமிழகம் திரும்பும் ஸ்டாலினுக்கு #GoBackStalin என்று டேக் போட்டு திரும்பி போகுமாறு விமர்சனங்களை செய்து வருகிறார்கள். அதுபோன்ற ட்வீட்டுகள் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகின. பதிலுக்கு திமுகவினர் #WelcomStalin டேக் போட்டு அவர்களும் ட்ரெண்ட் செய்தனர்.
|
விஜயகாந்த் நிலை
வைகோவுடன் கூட்டணி அமைத்ததால் விஜயகாந்த் நிலைதான் ஸ்டாலினுக்கு ஏற்படப்போகிறது என்று கூறி திரும்பி போகுமாறு விமர்சனம் செய்கிறது இந்த ட்வீட்.
|
அங்கேயே இருங்க என்கிறார்
ஸ்டாலின் லண்டன் சென்றபோது, அங்கு நடந்த விம்பிள்டனில் ரோஜர் பெடரர், ரபேல்நடால் போன்ற முன்னணி வீரர்கள் தோற்றது, உலக கோப்பை கால்பந்தில் பெல்ஜியத்திடம் இங்கிலாந்து தோற்றது, அதேநேரம், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் வருவது போன்றவற்றை பட்டியலிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
பழைய மீம்
நடிகர் சிவாஜி கணேசன் நடித்த பழைய திரைப்பட காட்சி வசனம் ஒன்றை மீமாக வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
பதவி விலக வேண்டும்
தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும் என்பதையே , ஸ்டாலின் குழந்தை போல திரும்ப, திரும்ப சொல்வதாக விமர்சனம் செய்கிறார் இந்த நெட்டிசன்.
|
வரவேற்பு ஜோர்
என்றும் திராவிட கோட்டையின் தளபதியே வருக வருக என #WelcomStalin 🌞💪 ஹேஷ்டேக்குடன் ஆதரவு அளிக்கிறார் இந்த நெட்டிசன்.
|
மறைக்க முடியாது
ஆயிரம் கைகள், மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை என்று எதிர் ட்வீட்டுகளுக்கு பதிலளிக்கிறார் இந்த திமுகக்காரர்.
|
ஸ்டாலினே தகுதியானவர்
ஸ்டாலின் மட்டுமே தமிழகத்தை ஆளத் தகுதியானவர் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன். கருணாநிதியுடன் இளமை காலத்தில் ஸ்டாலின் இணைந்து நிற்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications