அடடே... இது எப்படி இருக்கு? எடப்பாடி முன்னிலையில் அதிமுக அம்மா அணிக்கு திமுக நிர்வாகிகள் ஓட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: சென்னை அதிமுக அம்மா அணியில் திமுகவை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டோர் விலகி முதல்வர் எடப்பாடி முன்னிலையில் இணைந்தனர்.

சேலம் திமுகவில் ஏகப்பட்ட கோஷ்டிகள் உள்ளன. இந்த கோஷ்டி அக்கப்போருக்கு தீர்வு காண முடியாமல் திமுக தலைமையே விழிபிதுங்கி வருகிறது.

DMK cadres joined ADMK Amma team in front of CM Edappadi Palanisamy

இதனிடையே அதிமுக அம்மா அணிக்கு இணைய சேலம் திமுகவினர் சிலர் ஆர்வம் காட்டினர். அதன்படி, அதிமுக (அம்மா) தலைமை நிலைய செயலாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் எடப்பாடியில் உள்ள அவரது இல்லத்தில், சேலம் ஆத்தூர் 10-ஆவது வார்டு திமுக செயலாளர் ஜி.ராஜேஷ் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட திமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக அம்மா அணியில் இணைந்தனர்.

OPS Says We are ready to speak for another ADMK team ஓபிஎஸ் எடப்பாடி பேச்சுவார்த்தை?

சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.இளங்கோவன், எம்.எல்.ஏ. சின்னதம்பி ஆகியோர் உடன் இருந்தனர். அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என கூறி வரும் திமுகவுக்கு இது அதிர்ச்சி வைத்தியம் என்கிறது அதிமுக அம்மா கோஷ்டி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Salem Attur DMK cadres nearly 250 were joined in ADMK Amma team infront of CM Edappadi Palanisamy.
Please Wait while comments are loading...