For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியலில் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

மோடி எதற்காகக் கருணாநிதியைச் சந்தித்தார் என்று தெரியவில்லை என திருமாவளவன் கூறி உள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

மயிலாடுதுறை : திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அரசியலில் சற்றே எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று மயிலாடுதுறையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, மோடி - கருணாநிதி சந்திப்பு குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

DMK Chief Stalin should be Aware of Modi Politics: Says Thirumavalavan

தினத்தந்தி பவளவிழாவில் கலந்துகொள்ள வந்த மோடி, எதற்காக திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார் என்று தெரியவில்லை. இதனால், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் சற்று அரசியலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

மேலும் கருணாநிதியைப் பிரதமர் மோடி சந்தித்தது, திமுக கூட்டணி இடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே. தமிழகத்தில் பா.ஜ.க எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் முக்கிய கொள்கைத்திட்டமே திராவிடக் கழகங்களை சீரழிக்கும் வேலை, அதைத் தான் இப்போது அவர்கள் செய்து வருகிறார்கள். இதனால் நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

காவல்துறை அ.தி.மு.க அல்லது பா.ஜ.க கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற ஐயம் எழுகிறது. தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

English summary
VCK leader said that MK Stalin should be careful with Modi. BJP is trying to destroy Dravidian Politics in Tamilnadu, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X