அடுத்து என்ன.. ஆலோசிக்க ஜன.7ல் திமுக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனவரி 7ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

DMK district secretaries meeting will be conducting in Chennai on 7th January

இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
DMK district secretaries meeting will be conducting in Chennai on 7th January. DMK general secretary Anbazhagan has announced this.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற