For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக வேட்பாளர் பட்டியல்: 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு

By Mayura Akilan
|

சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலில் 2 பெண்களுக்கு மட்டுமே போட்டிய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட 35 திமுக வேட்பாளர்களுக்கான பட்டியலில், ஈரோடு தொகுதி பவித்ர வள்ளிக்கும், சேலம் தொகுதி உமாராணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

DMK fields few women candidates in loksabha poll

கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுகவில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் காயத்ரி ஸ்ரீதரனும், கன்னியாகுமரி தொகுதியில் ஹெலன் டேவிட்சனும் போட்டியிட்டனர்.

இதில் ஹெலன் டேவிட்சன் வெற்றி பெற்று கன்னியாகுமரியின் முதல் திமுக எம்.பி என்ற பெருமை பெற்றார். இந்த முறையும் திமுகவில் இரண்டு பெண் வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல 40 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவில் 4 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 33 சதவிகித இட ஒதுக்கீட்டினை எந்த கட்சிகளுமே பின்பற்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK has fielded many young candidates. But still most of the candidates are men even though the party has promised to fight for 33 per cent reservation for women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X