திமுக பொதுக்குழு கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலக்குறைவு காரணமாக வரும் 19ம் தேதி நடைபெற இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் அதிகாரம் கொண்ட பொதுக்குழுவை ஆண்டுக்கு இருமுறையாவது, கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதிமுறைகளில் ஒன்றாகும்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தியது. இவ்வாண்டுக்கான பொதுக்குழு கூட்டம், ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், கட்சி தலைவர் கருணாநிதி உடல்நிலையை கருத்தில் கொண்டு ஒத்திப்போடப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்
இதனிடையே, இம்மாதம், 19ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் ஆண்டிற்கு இரு முறையாவது பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிகளில் ஒன்று என்பதால், இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கும் திமுக சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அண்ணா அறிவாலயம் இல்லை
வரும் 19ம் தேதி திமுக பொதுக்குழு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை அண்ணா அறிவாலயத்தில் நடந்து வந்த பொதுக்குழு கூட்டம் இம்முறைதான் இங்கு மாற்றப்பட்டது.

கருணாநிதி உடல்நிலை
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு 19ம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இதே ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலா பொதுசெயலாளர் நியமனம் ரத்து உள்ளிட்ட 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை












Click it and Unblock the Notifications