#Exclusive காங்கிரஸ் தொலைந்து போக காரணமே திமுக தான்.. கட்சி எப்படி வளரும்? பழ.கருப்பையா பரபர பேட்டி!
சென்னை : "காங்கிரஸ் கட்சி தொலைந்து போனதற்குக் காரணம் திமுக, சொந்தக் கட்சியை வளர்க்காமல் திமுக பின்னாலேயே திரிந்தால் காங்கிரஸ் எப்படி வளரும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் நிறுவனரும், மூத்த அரசியல் தலைவருமான பழ.கருப்ப்பையா.
காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கிய பழ.கருப்பையா, காமராஜரின் சிண்டிகேட் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். காமராஜர் மறைந்த பின்னர் ஜனதா கட்சியில் சேர்ந்தார். பின்னர் ஜனதா கட்சி, திமுக, மதிமுக, காங்கிரஸ், அதிமுக என பல கட்சிகளுக்குச் சென்றார். அதிமுகவில் இருந்தபோதே அக்கட்சியை தாக்கிப் பேசியதற்காக ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் திமுகவிலும் அதன் பிறகு மக்கள் நீதி மய்யத்திலும் செயல்பட்டார். இதையடுத்து, தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் முதுபெரும் அரசியல் தலைவரான பழ.கருப்பையா.
பாஜக நினைப்பு : அவரது பேட்டியில், "என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பாஜக கொஞ்ச காலமாக நினைக்கிறது. 2 மோடிகள் அயோக்கியர்கள்.. அயோக்கியர்களாக இருப்பவர்கள் எல்லாம் மோடி என்றுதான் பெயர் வைப்பார்களா என ராகுல் காந்தி இயல்பாக நக்கலாக கேட்ட கேள்விக்கு, அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து, அவரது எம்.பி பதவியை அடுத்த நாளே பிடுங்கும் அட்டூழியம் நடக்கிறது. உலகில் எந்த நாட்டிலாவது அவதூறுக்கு கிரிமினல் சட்டத்தில் தண்டனை வழங்கப்படுமா? அந்த நீதிபதிக்கு குஜராத் அரசால் உடனடியாக பதவி வழங்கப்படுகிறது, அதனை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

அதுதான் நடந்துள்ளது : இப்படி இருந்தால் யார் நாட்டில் அரசியல் செய்ய முடியும்? ஜனநாயகத்தை எப்படி நிலைநிறுத்துவது? கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீட்டை பறித்து பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் மற்றும் வொக்கலிகர் சமூகத்தவருக்கு தலா 2 சதவீதம் என வழங்க முடிவெடுத்தது பாஜக அரசு. முஸ்லீம்கள் ஓட்டு போடவில்லை என்றால் பரவாயில்லை என பாஜக முடிவெடுத்தது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என ஒரு அரசு முடிவெடுத்தால், மக்கள் தண்டிப்பார்கள், அது கர்நாடகாவில் நடந்துள்ளது.
அதானிகள் ஆளுங்கட்சிகளை உருவாக்குவார்கள். மோடியை உருவாக்கியது அதானி. மோடி ஆட்சிக்கு வந்தபிறகு உலகின் மூன்றாவது பணக்காரராக அதானியை உருவாக்குகிறார். மோடி ஆட்சியின் உறுத்தலே சிறுபான்மையின மக்களை வதைப்பதுதான். இந்துக்கள் என்ற ஒருங்கிணைப்பின் மூலம், நாட்டை ஆள நினைக்கிறது பாஜக. சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

காரணம் திமுக : காங்கிரஸ் கட்சி தொலைந்து போனதற்குக் காரணம் திமுக, ஆ.ராசா. மன்மோகன் சிங்கின் ஆட்சி நல்லாட்சி. 2 முறை சிறப்பாக ஆட்சி செய்தார். டிஆர் பாலுவை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள மாட்டேன் எனச் சொல்லும் அளவுக்கு இருந்தார். 2ஜி முறைகேட்டில் 1.76 லட்சம் கோடி அடித்துவிட்டார்கள் என்று சொல்லித்தானே மோடி ஆட்சிக்கு வந்தார். பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தங்கள் வலிமையை இழந்துவிட்டது.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், ஒரு 10 பேர் எம்.பி ஆகவும், 20 பேர் எம்.எல்.ஏ ஆகவும் வேண்டிச் செய்ததைத் தவிர இங்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் என ஒரு 15 பேர் பட்டியலில் இருப்பவர்கள் தான் திரும்பத் திரும்ப எம்.பி ஆவார்கள். ஒரு பொதுக்கூட்டம் நடத்தமாட்டார்கள், பிரச்சனையை பேச மாட்டார்கள். கூட்டணிக் கட்சி என்றால் அடிமையா? சொந்தக் கட்சியை வளர்க்க வேண்டாமா? திமுக பின்னாலேயே திரிந்தால் காங்கிரஸ் எப்படி வளரும்?" எனத் தெரிவித்துள்ளார்.

-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications