திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் புகுந்தது வெள்ளம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

சென்னையில் மாலை முதல் கொட்டி வரும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

DMK leader Karunanidhi's Gopalapuram house has also been flooded

போக்கு வரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. சாலைகளில் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

மயிலாப்பூர், சைதாப்பேட்டை, அடையாறு என பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சென்னை மாநகர் ஸ்தம்பித்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதேபோல் சென்னையின் புகழ்பெற்ற கல்லூரிகளில் ஒன்றான எத்திராஜ் கல்லூரி விடுதியிலும் வெள்ளநீர் புகுந்துள்ளது.

இதனால் மாணவிகள் பெரும் அவிதியடைந்துள்ளனர். இதனிடையே தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தேசிய பேரிடர் மையம் அறிவுறுத்தியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK leader Karunanidhi's Gopalapuram house has also been flooded. Ethiraj college hostel alsobeen flooded in chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற