For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை சேப்பாக்கத்தில் திமுக உண்ணாவிரதம்; திருவாரூரில் கம்யூனிஸ்ட் ரயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று ஆளும் கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஜெ.அன்பழகன் உண்ணாவிரதம்

ஜெ.அன்பழகன் உண்ணாவிரதம்

இந்நிலையில் எதிர்க்கட்சியான திமுக சார்பில் அக்கட்சியின் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஜெ.அன்பழகன் மற்றும் திமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

காத்திருந்து கைவிரித்தது

காத்திருந்து கைவிரித்தது

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.அன்பழகன் தமிழக அரசு மீது குற்றம்சாட்டினார். காவிரி விவகாரத்தில் கடைசி நேரம் வரை காத்திருந்து அதிமுக அரசு கைவிரித்துள்ளது என அவர் தெரிவித்தார்.

அநீதி இழைப்பு

அநீதி இழைப்பு

6 வாரம் காத்திருந்து ஆளும் அதிமுக அரசு நேரத்தை வீணடித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது என்று ஜெ.அன்பழகன் கூறியுள்ளார்.

கம்யூ. ரயில் மறியல்

கம்யூ. ரயில் மறியல்

இதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். திருவாருரிலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

ரயில் மறியல் - கைது

ரயில் மறியல் - கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலத்தில் விழுப்புரம்- திருப்பதி விரைவு ரயிலை மறித்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சென்னை திருவொற்றியூரில் திமுகவினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

English summary
DMK MLA J Anbazhagan keeps hunger strike in Chennai Chepak. Communist party did Rail blockade protest in Thiruvannamalai district. They have been arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X