சட்டசபையில் பேச வேண்டிய பிரச்சினைகள் என்னென்ன... ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து திமுக எம்எல்ஏக்களுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

2018-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றவுள்ளார். கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து சட்டசபை அலுவல் ஆய்வு கூட்டம் முடிவு செய்யும்.

DMK MLAs meeting in Anna Arivalayam

இந்நிலையில் நாளை ஆளுநரின் உரை மீது இனி வரும் நாட்களில் விவாதங்கள் நடைபெறும். இந்நிலையில் திமுக எம்எல்ஏ கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் நாளை சட்டசபையில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Assembly gathers tomorrow, today DMK is conducting MLAs meeting. It also going to discuss about the issues which are to be raised tomorrow.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற