ஆர்.கே நகர் தோல்வி எதிரொலி.. 120க்கும் அதிகமான திமுக நிர்வாகிகள் நீக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தோல்வியை அடுத்து 120க்கும் அதிகமான திமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன் நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். இதில் திமுக கட்சி மூன்றாம் இடம் பிடித்து இருந்தாலும் டெபாசிட் இழந்து தோற்றது.

DMK removes more than 120 members from the party

இந்த மோசமான தோல்வியின் காரணமாக திமுக கட்சியின் மீது பலரும் விமரிசனம் வைத்தனர். இந்த தோல்வி குறித்து ஆராய திமுக கட்சியால், சக்கரபாணி தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழு கொடுத்த பரிந்துரையின் பேரில் பல திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஆர்.கே நகரில் மொத்தம் 120க்கும் அதிகமான திமுக நிர்வாகிகள் நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

14வது வார்டை சேர்ந்த நிர்வாகிகள் அதிகமாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
More than 120 DMK members have been removed from the party, They have been removed after huge loss in RK Nager election.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற