‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளித்தால் வழக்கு.. மிரட்டும் ஆதரவுக் குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கிடைக்குமா எனத் தமிழக மாணவர்களும் பெற்றோர்களும் ஏக்கத்தோடு காத்திருக்க, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தால் வழக்குத் தொடர்வோம் என நீட் தேர்வு ஆதரவுக் குழு மிரட்டல் விடுத்துள்ளது.

தமிழக மாணவர்களுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை வழக்கமாக நடந்து வந்தது. இதனை மாற்றி நீட் தேர்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

Do not want exemption, NEET supporter group threatens to file case

நீட் தேர்வு விஷயத்தில் மாநில அரசு தொடக்கத்தில் மெத்தனமாக இருந்துவிட்டு கடைசி நேரத்தில் நடவடிக்கை எடுப்பதாக டெல்லிக்கும் தமிழ் நாட்டிற்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசோ திட்டவட்டமாக நீட் தேர்வில் இருந்து விலக்கு இல்லை என்று கூறிவிட்டது.

இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஓராண்டுக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டால் அது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று கூறினார்.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று 2013 நீட் ஆதரவு அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டால் வழக்குத் தொடர்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த அமைப்பு சார்பில் பேசிய பெற்றோர்கள், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தால் தங்களது பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If Union government gives exemption from NEET, we will file a case against it said NEET supporter group.
Please Wait while comments are loading...