எச். ராஜாவின் இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கா??

சென்னை: ஓரினச்சேர்க்கை குறித்து தனக்கு வந்த கேள்வியை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் எச். ராஜா.
ஓரினச்சேர்க்கையை சுப்ரீம் கோர்ட் சட்டப்பூர்வமாக்கி விட்டது. இதற்கு இடையூறாக இருந்து வந்த சட்டப் பிரிவு 377 செல்லாது என்றும் சொல்லி விட்டது. இதை வைத்து வாதப் பிரதிவாதங்கள் களை கட்டியுள்ளன.

முகநூலில் ஒரு நண்பரின் கேள்வி. மிருகங்களோ அல்லது தாவரங்களோ கூட ஓரினசேர்க்கை அல்லது தன்பால் ஈர்ப்பில் ஈடுபடாத போது மனிதன் மட்டும் ஏன் இப்படி? இதற்கு என்ன பதில் சொல்வது?
— H Raja (@HRajaBJP) September 7, 2018
இந்த நிலையில் எச். ராஜா ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில்... முகநூலில் ஒரு நண்பரின் கேள்வி. மிருகங்களோ அல்லது தாவரங்களோ கூட ஓரினசேர்க்கை அல்லது தன்பால் ஈர்ப்பில் ஈடுபடாத போது மனிதன் மட்டும் ஏன் இப்படி? இதற்கு என்ன பதில் சொல்வது? என்று கேட்டுள்ளார் எச். ராஜா
உங்களிடம் இதற்குப் பதில் இருக்கா.. இருந்தா ராஜா டிவீட்டுக்கு பதில் சொல்லுங்க. ஆனால் அங்கு ஏகப்பட்ட பேர் பதில்களைக் குவிக்க ஆரம்பித்து விட்டனர். அதில் ஒரு சாம்பிள் இது...
"சாதி, மதம் என்ற பிரிவினை மனிதனிடம் மட்டும் ஏன் இருக்கிறது" என்று இதுவரை தங்களிடம் யாரும் கேட்கவில்லையா? கேட்டதில்லையா? கேட்பார் யாரும் இல்லையா?
— கெட்டவன் யாஷ் (@cheeyanragu) September 7, 2018
"சாதி, மதம் என்ற பிரிவினை மனிதனிடம் மட்டும் ஏன் இருக்கிறது" என்று இதுவரை தங்களிடம் யாரும் கேட்கவில்லையா? கேட்டதில்லையா? கேட்பார் யாரும் இல்லையா?