சிஎஸ்கே ரசிகர்களை தாக்கியது யார்.. பரபரப்பு வீடியோ.. அம்பலப்படுத்திய நாம் தமிழர் கட்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சிஎஸ்கே ரசிகர்களை தாக்கியது நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அல்ல- வீடியோ

  சென்னை: சென்னை சேப்பாக்கம் அருகே சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியது தாங்கள் இல்லை என நாம் தமிழர் கட்சி மறுத்துள்ளது.

  காவிரி பிரச்சினை நிலவும் சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கூடாது என போராட்டக்காரர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து சேப்பாக்கம் மைதானம் அருகே நேற்று போராட்டக்காரர்கள் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

  அப்போது போலீசாரை சிலர் தாக்கியுள்ளனர். போலீசாரும், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

   போர்க்களம்

  போர்க்களம்

  இந்த சம்பவங்களால் அண்ணாசாலை பகுதி போர்க்களமானது. போராட்ட களத்திற்குள் யாரோ கருப்பு ஆடுகள் புகுந்துவிட்டனர் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்தார். வன்முறை கூடாது என அவர் எச்சரித்தார். இந்த களேபரங்களுக்கு மத்தியில் நெஞ்சை பதற வைக்கும் மற்றொரு சம்பவமும் ஸ்டேடியம் அருகே அரங்கேறியது.

   ரசிகர்கள் மீது தாக்குதல்

  ரசிகர்கள் மீது தாக்குதல்

  ஸ்டேடியம் அருகே சென்று கொண்டிருந்த மஞ்சள் ஜெர்சி அணிந்த ரசிகர்களை சிலர் விரட்டி விரட்டி அடித்தனர். உருட்டு கட்டையை வைத்து தாக்கிய காட்சிகளும் வீடியோக்களாக வெளியாகின. ரசிகர்களின் ஜெர்சியை கழற்றி அவர்களை வெற்று உடம்புடன் ஓட விட்டனர்.

   நாம் தமிழர் மறுப்பு

  நாம் தமிழர் மறுப்பு

  இதனிடையே, மஞ்சள் ஜெர்சி அணிந்த ரசிகைகள் சிலரையும் சட்டையை கழற்ற சொல்லி அநாகரீகம் காட்டியதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்ட டுவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த களேபரங்கள் பின்னணியில் எந்த கட்சியினர் ஈடுபட்டனர் என்பது பெரும் விவாதப்பொருளானது.
  இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில், தங்களுக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என தகவல் வெளியிட்டுள்ளது.

  அரசியல் காழ்ப்புணர்ச்சி

  உடலில் மஞ்சள் வண்ணம் பூசிய #CSK ரசிகர் மீதும் மற்றும் சென்னை அணி சீருடை அணிந்த ரசிகர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது நாம்தமிழர் கட்சியினர் அல்ல! அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தவறான பொய்ப் பரப்புரை. இவ்வாறு நாம் தமிழர் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

  வேறு கட்சியினரா?

  இதேபோல ரசிகர்களை தாக்கியது கருணாஸ் கட்சியினர் என்று கூறும் ஒரு நெட்டிசன் வெளியிட்ட டுவிட்டை நாம் தமிழர் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் கூறியுள்ளதாவது: அந்த மஞ்சள் பெயிண்ட் தோனி ரசிகன் @CricSuperFan மற்றும் ரசிகர்களை அடித்தது கருணாஸின் முக்குலத்தோர் கட்சி நபர்கள். இந்த வீடியோவை வைத்து @NaamTamilarOrg மற்றும் சீமான் தம்பிகள் அனைத்து ஊடகத்தையும் கேள்வி கேட்கலாம்😉 எந்த கட்சி ஆயினும் மக்கள் மீது கை வைத்தல் கூடாது இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Do you know who were beaten up CSK fans? here is the explaination given by the Naam Tamilar party.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற