For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.விடம் கைநாட்டு வாங்கிய டாக்டரை விசாரிக்க வேண்டும்... மனோஜ் பாண்டியன் ஆவேசம்

Google Oneindia Tamil News

சென்னை: அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு கட்சி சார்பாக வழங்கப்படும் விண்ணப்பத்தில் கட்சித் தலைவர் கையெழுத்து இட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவின் கைநாட்டு வைக்கப்பட்டது. அப்போது உடன் இருந்த அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் கோரியுள்ளார்.

ஓபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதோடு, நீதி விசாரணை வேண்டும் என்று கோரினர்.

கைநாட்டு யாருடையது?

கைநாட்டு யாருடையது?

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு கட்சி சார்பாக வழங்கப்படும் விண்ணப்பத்தில் கட்சித் தலைவர் கையெழுத்து இட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவிடம் இருந்து கையெழுத்து வாங்கவில்லை. அதற்கு பதிலாக கைநாட்டு வைக்கப்பட்டது. அந்த கையெழுத்து யாருடையது என்று மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

கைநாட்டு யாருடையது?

கைநாட்டு யாருடையது?

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு கட்சி சார்பாக வழங்கப்படும் விண்ணப்பத்தில் கட்சித் தலைவர் கையெழுத்து இட வேண்டிய இடத்தில் ஜெயலலிதாவிடம் இருந்து கையெழுத்து வாங்கவில்லை. அதற்கு பதிலாக கைநாட்டு வைக்கப்பட்டது. அந்த கையெழுத்து யாருடையது என்று மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

டாக்டர் பாலாஜியிடம் விசாரணை

டாக்டர் பாலாஜியிடம் விசாரணை

ஜெயலலிதாவிடம் இருந்து கைநாட்டு பெறப்பட்ட போது டாக்டர் பாலாஜி உடன் இருந்ததாக அவரே கூறியுள்ளார். எனவே, அந்த டாக்டரை விசாரிக்க வேண்டும் என்றும் மனோஜ் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

அப்பல்லோ அறிவிப்பு

அப்பல்லோ அறிவிப்பு

முன்னதாக, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் உள்ளிட்ட டாக்டர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது, ஜெயலலிதாவிடம் இருந்து கைநாட்டு பெறப்படும் போது தான் உடன் இருந்ததாக டாக்டர் பாலாஜி கூறியிருந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

தேர்தல் விண்ணப்பத்தில் ஜெயலலிதா கைநாட்டு வைத்துள்ளார் என்ற செய்தி வெளியான போதே, கடும் சர்ச்சை அப்போது எழுந்தது. அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரித்திருந்தனர். இந்நிலையில், அதிமுகவை சேர்ந்தவர்களே தற்போது இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Dr. Balaji, from Apollo Hospital should be inquired, demands Manoj Pandian today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X