For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக, அதிமுக அரசுகள், கல்வி, மருத்துவத்தை ஏன் இலவசமாக வழங்கவில்லை? சீமான் கேள்வி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மதுவை விற்று இலவசங்கள் வழங்கும் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் கல்வியை இலவசமாக வழங்குமா? என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

காஞ்சிபுரத்தில் தன் கட்சிக்கு வாக்குச் சேகரித்து பிரசாரம் செய்தபோது சீமான் கூறியதாவது: மதுவை விற்று இலவசங்கள் வழங்கும் அதிமுக மற்றும் திமுக ஆட்சிகள் கல்வியை இலவசமாக வழங்குமா? இலவசங்கள் வழங்கியதை சாதனை என்று கூறும் முதல்வர் ஜெயலலிதா,கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மது குடித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்..இது சாதனையா வேதனையா?

Dravidian parties should have given education freely instead of cell phones, says Seeman

நாட்டில், கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம் என்று அனைத்தும் தனியார் மயம். அப்படி என்றால் எதுக்குத்தான் அரசு இருக்கிறது? என்றால் கமிஷன் வாங்கிக்கொண்டு 'கம்'னு இருப்பதற்குத்தான் அரசு.

இங்கு முதல்வர்கள், பிரதமர்கள் அல்ல மக்கள் தேர்வு செய்வது. கமிஷன் பாய்ஸ்களைத்தான் தேர்வு செய்கிறோம். அப்படி அனைத்துத் துறைகளிலும் கமிஷன் வாங்குகிறார்கள் அவர்கள்.எல்லாமே தனியார் வசம் என்றால் சாராய ஆலைகளையும், சாராய கடைகளையும் அரசு நடத்தும் என்றால் அந்த அரசு நமக்குத் தேவையா? இவ்வாறு பிரசாரம் செய்தார்.

English summary
Dravidian parties should have given education freely instead of cell phones, says Seeman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X