For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உறவுக்கு மறுத்த மனைவி... கத்தியால் குத்திக் கொன்ற குடிகார மாந்த்ரீகர் கைது

Google Oneindia Tamil News

சென்னை: மனைவியை கட்டாயப்படுத்தி உறவுக்கு அழைத்து அவர் வராததால் கோபமடைந்த ஒரு கேரள மந்திரவாதி, தனது மனைவியை சரமாரியாக மார்பில் கத்தியால் குத்திக் கொலை செய்தார். அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்தவர் முகம்மது ரபீக். 36 வயதான இவர் மந்திரவாதியாகவும் இருக்கிறார். பில்லி சூனயிம் எடுப்பது, வைப்பது, பேய் விரட்டுதல், மந்திரிப்பது, தாயத்து கட்டுவது போன்றவை இவரது தொழிலாம்.

இவர் திருவொற்றியூர் சின்னமேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் 2 மனைவிகள். முதல் மனைவி பெயர் ரமீதா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எப்போது பார்த்தாலும் குடிப்பது, குடித்து விட்டு வந்தார் செக்ஸ் தொல்லை கொடுப்பது என்று ரபீக் தொல்லைப்படுத்தியதால் ரமீதா அவரை விட்டுப் பிரிந்து தனியாக போய் விட்டார்.

தற்போது நூர்ஜகான் என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருகிறார் ரபீக். நூர்ஜகானையும் இதேபோல செக்ஸ் ரீதியாக கொடுமைப்படுத்தி வந்துள்ளார் ரபீக்.

ஆரம்பத்தில் பொறுத்துப் போன நூர்ஜகான், கடந்த சில நாட்களாக கணவரை எதிர்க்க ஆரம்பித்தார். மது அருந்தினால் இனிமேல் என் பக்கத்தில் வரக் கூடாது என்றும் கண்டிப்பாக கூறியுள்ளார். இதனால் கோபமடைந்தார் ரபீக்.

இந்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பும் மது அருந்தி விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். வந்தவர், மனைவியை உறவுக்கு அழைத்தார். மனைவி மறுத்தார். இதனால் வெகுண்ட ரபீக், வீட்டில் கிடந்த கத்தியை எடுத்து நூர்ஜகானை கீழே தள்ளி சரமாரியாக மார்பிலேயே கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கதறித் துடித்தார் நூர்ஜகான்

அப்படியே நீண்ட நேரம் துடித்துள்ளார் அந்தப் பெண். சிறிது நேரத்தில் போதை தெளிந்த ரபீக், செய்த காரியத்தை உணர்ந்து, மனைவியைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குப் போனார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து ரபீக்கை கைது செய்தனர்.

English summary
A drunken man stabbed his wife to death in Chennai. Police have arrested the person.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X