கனமழை எதிரொலி... நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தமிழகம் முழுக்க இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் நேற்றில் இருந்து கனமழை பெய்து வருகிறது. காலையில் இருந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் மற்றும் கடலோர மாவட்டங்களில் நேற்று காலையில் இருந்து கடுமையான மழை பெய்து வருகிறது. இங்கு பெய்த மோசமான மழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது.

Due to heavy rain holiday announced for schools in Thirunelveli District

மேலும் பல பகுதிகளில் இருக்கும் பல ஏரிகள் நிரம்பி இருப்பதால் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டில் இன்னும் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது.

இந்த மழையின் காரணமாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல் காலியில் இருந்து திருநெல்வேலியிலும் கடுமையான மழை பெய்தது. இதையடுத்து அங்கு பல பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கியது. தாமிரபரணி ஆற்றில் நீர் நிரம்பி ஓடியது . இதையடுத்து பாதுகாப்பு கருதி தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rain started reach its peak again in many parts of Tamilnadu. Due to heavy rain holiday announced for schools in Thirunelveli District.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற