கலர்ஃபுல்லா இருக்கீங்க.. உங்கள் இளமையின் ரகசியம் என்ன? துரைமுருகனை கலாய்த்த ஓபிஎஸ்
சட்டசபையில் எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகனை உங்கள் இளமையின் ரகசியம் என்ன என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டதால் சிரிப்பலை உருவானது.
சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகனை உங்கள் இளமையின் ரகசியம் என்ன என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டதால் சிரிப்பலை உருவானது.
தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சட்டசபையில் காரசார விவாதங்கள் நடைபெறும் நிலையில் இடையிடையே நகைச்சுவை சம்பவங்களும் அரங்கேறுவதுண்டு.

புதிய வட்டங்கள்
இந்நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தின் போது, கேவி குப்பம் அதிமுக எம்எல்ஏ லோகநாதன் புதிய வட்டங்களை உருவாக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சரிடம் கேட்டார்.

குறுக்கிட்ட துரைமுருகன்
அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார் அம்மாவின் அரசு ஏற்கனவே 72 வட்டத்தை உருவாக்கி உள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் 73வது வட்டத்தை அம்மாவின் அரசு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஓபிஎஸ் நன்றி
உடனடியாக இருக்கையில் இருந்து எழுந்த துணை முதல்வர் அம்மாவின் அரசு என்று கூறியதற்கு நன்றி என்றார். அதற்கு பதிலளித்த துரைமுருகன், கூடுதல் வட்டத்தை ஏற்படுத்தினால் எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்கிறேன் என்று கூறினார்.

இளமையின் ரகசியம் என்ன?
இதைத்தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், இன்று துரைமுருகன் கலர்ஃபுல்லாக இருக்கிறார். என்றும் 16 ஆக துரைமுருகன் உள்ளார். உங்கள் இளமையின் ரகசியம் என்ன? என துரைமுருகனிடம் கேட்டார்.

பிங்க் கலர் சட்டை
இதனால் அவையில் சிரிப்பலை உருவானது. எதிர்க்கட்சித் துணை தலைவரான துரைமுருகன் இன்று பிங்க் கலர் சட்டை அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications