சென்னையில் மழைக்கு குட் பை சொல்லும் நேரம் வந்துவிட்டது... தமிழ்நாடு வெதர்மேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மழையால் நிரம்பும் ஏரிகள்: சென்னைக்கு வருது தண்ணீர்..வீடியோ

  சென்னை: மழைக்கு குட் பை சொல்லும் நேரம் வந்துவிட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

  இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சென்னையில் பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

  குட் பை சொல்லும் நேரம்

  குட் பை சொல்லும் நேரம்

  இந்நிலையில் சென்னையில் கடந்த 9 நாட்களாக பெய்து வந்த மழை இனி நீடிக்காது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் பெய்த மழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலைக்கு குட் பை சொல்லும் நேரம் வந்துவிட்டதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

  நல்ல வெயில் காயும்

  நல்ல வெயில் காயும்

  சென்னையில் பெய்த மழை அதிகாலையுடன் நிறைவடைந்துவிட்டதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். வரும் நாட்களில் நல்ல வெயில் காயும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  தென் தமிழகம், டெல்டா

  தென் தமிழகம், டெல்டா

  தென் தமிழகம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் இன்றுமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். கோவை, திருப்பூர், ஈரோடு நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

  புதிய காற்றழுத்தத்தை பொறுத்தே

  புதிய காற்றழுத்தத்தை பொறுத்தே

  இங்கும் நாளை முதல் மழை இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது நான்கிலிருந்து 5 நாட்கள் வடகிழக்குப் பருவமழை பிரேக் எடுக்கப்போவதாகவும் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நகர்வை பொறுத்தே மீண்டும் மழை இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  With the early morning rains in Chennai coming to end, Lets say Goodbye to one of the long lasting Trough of low / Low Pressure Area which gave us rains for good 9 straight days said Tamilnadu weatherman.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற