அக்கா தமிழிசையே சொல்லிட்டாங்க.. தினகரன் தகுதி நீக்கம் உறுதியாகிறது!
ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக அம்மா அணியின் வேட்பாளர் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்யும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடக் கூடும் என கூறப்படுகிறது.,
சென்னை: தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கும்... மத்திய அரசு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதை முன்கூட்டியே தொடர்ந்து ஆரூடம் போல கூறி வருகிறார் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தராஜன். தற்போது அதிமுக (அம்மா) அணி வேட்பாளர் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியிருப்பதால் இன்று அல்லது நாளை தேர்தல் ஆணையத்திடமும் இருந்து இதேபோல் ஒரு அறிவிப்பு வெளியாகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் அதிமுக, திமுகவை பலவீனப்படுத்துவதில் மத்திய பாஜக அரசு முனைப்புடன் உள்ளது. இதில் தற்போது அதிமுகவை இரண்டு கட்சிகளாக பிளவுபட வைத்துள்ளது பாஜக.
அத்துடன் அதிமுகவின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காது என முதலில் கூறியவர் தமிழிசை சவுந்தராஜன்தான்.

இரட்டை இலை முடக்கம்
அதேபோல் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தமிழிசையின் கருத்துகளை முன்வைத்து தினகரன் கோஷ்டி கடுமையாக விமர்சனம் செய்து வந்தது.

ஆர்கே நகர் தேர்தல்
தற்போது ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

தகுதி நீக்கம்
இந்த நிலையில் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழிசை சவுந்தராஜன் வலியுறுத்தி வருகிறார். டெல்லியில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் தமிழிசையின் இந்த கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு
தமிழிசை கூறுவதைப் போல அனேகமாக டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்! தமிழக பாஜகவினர் நினைப்பது அத்தனையும் கனஜோராக அல்லவா நடக்கிறது!
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications