For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமூக வலைதளத்தில் பிரசாரம்: அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

EC notice to AIADMK for Social network campaign, says Praveen Kumar
சென்னை: சமூக வலைதள பிரசாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:

சட்டமன்ற அலுவலகங்களை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று கண்டிப்புடன் கூறிய பிரவீண்குமார், பொதுக் கூட்டங்களில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவது தவறு என்றும், கட்சி கூட்டங்களில் உணவு வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்வது தொடர்பாக அதிமுகவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரவீண்குமார் தெரிவித்தார்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட எம்.கே.பி.நகர் மக்களுக்கு தற்போது தற்காலிக குடியிருப்பு வழங்கலாம் என்றும், நிரந்தர குடியிருப்பு வழங்க முடியாது என்றும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், ஏப்ரல் 22ஆம் தேதி மாலை வரை கருத்து கணிப்புகளை வெளியிடலாம்.

உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்றும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

தமிழகத்தில் இதுவரை 2500 மிக்சி, 61 கிலோ வெள்ளி பொருட்கள், 7 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுள்ளது என்றும், பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பிரவீண்குமார் கூறினார்.

English summary
CEO Praveen Kumar said In order to curb the bribing of voters during General Elections to Lok Sabha, 2014 the Election Commission of India has taken various measures. As a part of this Many Teams such as Flying Squads, Static Surveillance Teams have been formed and those have till now seized the amount of Rs 2,16,47,750 /- and Sarees, Jewelleries and other non cash items worth Rs 47,18,660 /-. The entire process ofseizure have been video graphed and seized amount and other items have beenhanded over to the Treasury
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X