ஏரி விவகாரத்தில் சொந்த தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: ஏரி விவகாரத்தில் சொந்த தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.

முதல்வர் பழனிச்சாமியின் சொந்த தொகுதியான சேலம் எடப்பாடியில் கச்சராயன் ஏரியை திமுகவினர் தூர் வாரினர். இதற்கு எடப்பாடி பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து ஏரியை மீட்டனர்.

Edappadi consituency public oppses ADMK on Lake Issue

சொந்த தொகுதியிலேயே திமுகவினர் தூர் வாரியதும் அதை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பார்வையிட செல்வதும் தமக்கு அவமானம் என கருதினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் கோவை அருகே ஸ்டாலின் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

தற்போது கச்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. இந்த நிலையில் திடீரென தூர்வாரப்பட்ட அந்த ஏரிக்குள் நுழைந்த அதிமுகவினர் கட்சி கொடிகளை நட்டு மண்ணை வார முயற்சித்தனர்.

இது எடப்பாடி மக்களிடையே கடுமையாக கோபத்தை ஏற்படுத்தியது. தற்போதுதான் சீரமைக்கப்பட்ட ஏரியை அரசியல் நோக்கத்துடன் அதிமுகவினர் சிதைப்பதை ஊரே ஒன்று திரண்டு தடுத்து நிறுத்தினர். ஏரியில் இருந்து அதிமுக கொடியை அகற்றி அக்கட்சியினரையும் விரட்டியடித்தனர் பொதுமக்கள். சொந்த தொகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பு காட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Edappadi which was Chief Minister Palanisamy's consituency public strongly oppsed to ADMK men on Lake Issue.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற