போர்ஜரி, 420களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது... எடப்பாடி மீது தினகரன் பாய்ச்சல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போர்ஜரி மற்றும் 420 என தினகரன் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்சியிலிருந்து டிடிவி தினகரனை நீக்கி முதல்வர் எடப்பாடி தலைமையிலான அணியினர் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றினர். இதனால் தினகரன் தரப்பு ஆடிப்போயுள்ளது.

தினகரன் தரப்பு எதிர்ப்பு

தினகரன் தரப்பு எதிர்ப்பு

எடப்பாடி அணியினரின் இந்த அதிரடி முடிவுக்கு தினகரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தஞ்சாவூரில் தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தல் ஆணையத்தில்..

தேர்தல் ஆணையத்தில்..

என்னை துணைப் பொதுச்செயலாளராக நியமித்ததை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். ஆனால் இப்போது என்னை நீக்குவதாக சொல்கிறார்.

போர்ஜரி, 420 வேலை

போர்ஜரி, 420 வேலை

தேர்தல் ஆணையத்தில் ஒன்று வெளியே ஒன்று என எடப்பாடி பழனிச்சாமி முரண்பாடாக பேசி வருகிறார். பதவிக்காக போர்ஜரியாக பேசி, 420 வேலைகளை செய்வோருக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.

கூவத்தூர் விடுதி

கூவத்தூர் விடுதி

என்னுடைய நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம்தான் கூற வேண்டும் என்றும். கூவத்தூர் விடுதியில் நாங்கள் இல்லாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை உணர வேண்டும்.

இவ்வாறு தினகரன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran said that Edappadi palanisami speaking forgery. Edappadi palanisami is a 420 TTV Dinakaran said.
Please Wait while comments are loading...