இலங்கை சிறையில் உள்ள 11 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்: பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி 'லெட்டர்'
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களின் 135 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதையும் அவர்களின் படகுகளை பறித்து செல்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. பிடித்து செல்லும் மீனவர்களை அவ்வப்போது நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுவித்து வருகிறது.

அண்மையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் இலங்கை சிறையில் உள்ள 11 தமிழர்கள் மற்றும் 135 மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மீனவர்கள் விடுவித்த போதிலும், படகுகள் விடுவிக்கப்படவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் படகுகள், பழுதடைந்துள்ளது. மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications