பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் 122 எம்.எல்.ஏக்களும் சென்னைக்கு வர எடப்பாடி திடீர் அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் 122 எம்.எல்,ஏக்களும் நாளை சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 122 பேரும் நாளை சென்னைக்கு வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

Edappadi palanisamy call to all AIADMK MLAs

கட்சித் தலைமை அலுவலகத்தில் இருந்து எம்எல்ஏக்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் உள்ள ஐ.என்.எஸ். போர்க்கப்பலை பார்வையிட எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளையில் நாளை சென்னை வரும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிமுக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்துபேச தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக அம்மா கட்சி எம்எல்ஏக்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN CM Edappadi palanisamy call to all AIADMK MLAs.
Please Wait while comments are loading...