"என்னை யாருக்கும் தெரியாமல் 10 நாட்கள் வைத்து பாதுகாத்தவர் எடப்பாடி"- தமிழ்மகன் உசேன் சொன்ன சம்பவம்!
மயிலாடுதுறை : தனக்கு கொலை மிரட்டல்கள் வந்தபோது யாருக்கும் தெரியாமல் தனி இடத்தில் 10 நாட்கள் வைத்து பாதுகாத்தவர் எடப்பாடி பழனிசாமி என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பேசியுள்ளார்.
ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவரது தேர்வு செல்லாது என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தர்காக்களில் வழிபாடு நடத்தி வருகிறார் தமிழ்மகன் உசேன். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்குச் சென்ற அவர், ஈபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் எனப் பேசியுள்ளார்.

தமிழ்மகன் உசேன்
மீண்டும் தமிழகத்தில் அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திடவேண்டும் என அதிமுக அவைத் தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவருமான தமிழ்மகன் உசேன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த மேலசாலை அன்னை அஜ்மத் பீவி தர்காவில், சிறப்பு பிரார்த்தனை செய்து வழிபட்டார்.

ஈபிஎஸ் ஆட்சி அமைய
பின்னர் அதிமுகவினர் மத்தியில் பேசிய தமிழ்மகன் உசேன், "மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திட தமிழகம் முழுவதும் உள்ள தர்காக்களில் பிரார்த்தனை செய்து வருகிறேன். 31ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் வருகை தந்துள்ளேன். இறைவன் நினைத்தால் அனைத்தையும் நடத்தித் தருவான்.

சாதாரணமாக பதவிக்கு வரவில்லை
அதிமுக சின்னாபின்னப் படுத்தப்படும்போது கட்சியைக் கட்டிக் காப்பாற்ற பாடுபடும் தொண்டனில் நானும் ஒருவன். 1953ஆம் ஆண்டில் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தை தொடங்கியவன் நான். 42 வருடங்கள் எம்ஜிஆருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன். செல்லப் பிள்ளையாக வைத்திருந்தார். நான் சாதாரணமாக அவைத்தலைவராக வரவில்லை. இயக்கத்திற்கு பாடுப்பட்டவர்களுக்கு இறைவன் உரிய நேரத்தில் நல்ல தீர்ப்பை வழங்குவார்.

அவைத்தலைவராக
எம்ஜிஆர்., ஜெயலலிதாவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி எப்படி வழிநடத்தப் போகிறார் என நினைத்தபோது எடப்பாடி பழனிசாமி சிறப்பாக தலைமை வகித்து தன்னை சிறப்பாக ஆயத்தப்படுத்திக்கொண்டு கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தினார். இது தொடரவேண்டும். என்னை 2523 பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து அவைத் தலைவராக தேர்வுசெய்துள்ளனர். அதற்கு முன்மொழிந்தவர் எடப்பாடி பழனிசாமி.

என்னை பாதுகாத்தவர் எடப்பாடி
அதிமுக அவைத் தலைவர் ஆனதால் என்னை கொலை செய்துவிடுவோம் என சிலர் மிரட்டினார்கள். எனது செல்போனில் கொலை மிரட்டல் அழைப்புகள் தான் அதிகம் வந்தன. அப்போது என்னை யாருக்கும் தெரியாமல் தனியான இடத்தில் 10 நாட்கள் வைத்து பாதுகாத்தவர் எடப்பாடி பழனிசாமி.

மக்களிடம் பிரதிபலிக்கிறது
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என எங்கு சென்றாலும், எந்த வழக்கிலும் வெற்றி பெறப்போவது எடப்பாடி தான். 95 சதவீத அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் உள்ளனர். பொதுச் செயலாளராக தலைமை ஏற்று அதிமுகவை எடப்பாடி பழனிசாமி வழிநடத்த வேண்டும். திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஈபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சிப் பொறுப்பை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் பிரதிபலிக்கிறது" எனப் பேசினார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications