சிலுவம்பாளையத்தில் யாக பூஜை.. “ஏறுமுகம்”.. சொந்த ஊரில் குடும்பத்தினருடன் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி!
சேலம் : எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக தனது சொந்த கிராமமான சிலுவம்பாளையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு கோவிலில் நடைபெற்ற யாக பூஜையில் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து வழக்கு தொடர்ந்த வண்ணம் இருந்தார்.

பொதுச் செயலாளர் எடப்பாடி : இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என அறிவிக்க கோரிக்கை விடுத்து தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி முறையிட்டிருந்தார். அதேபோல ஓபிஎஸ், பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் முடிவு அறிவித்ததை அடுத்து ஈபிஎஸ் தரப்பினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி செல்லும் ஈபிஎஸ் : அதிமுகவின் பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பின்னர், முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார். சென்னையிலில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் அவர் பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்துப் பேசவுள்ளார். பிரதமர் மோடியையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜக மேலிடத் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று கர்நாடக மாநிலம், புலிகேசி நகர் தொகுதியிலிருந்து வேட்பாளரை அதிமுக திரும்பப் பெற்றுள்ளது. இந்நிலையில், அமித் ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு நாடாளுமன்ற கூட்டணியை உறுதிப்படுத்துவதோடு, மாநில அளவிலான பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த ஊரில் யாக பூஜை : இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்திற்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. கடந்த முறை சென்றபோது நெடுஞ்சாலை நகர் வீட்டிலேயே தங்கி, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுத் திரும்பிய நிலையில், இந்த முறை தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கையோடு சிலுவம்பாளையம் சென்றார் ஈபிஎஸ்.
சொந்த ஊருக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். சிலுவம்பாளையத்தில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. அதையொட்டி, சிவாச்சாரியர்கள் நடத்திய யாக பூஜையில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார் எடப்பாடி பழனிசாமி.
-
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
Election Exclusive: ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல..அம்பத்தூரில் அய்யாவுக்கு ஆப்பு! மது குடிப்போர் கையில் சிலிண்டர் -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
சைக்கிள் ஓட்டறதெல்லாம் ஓ.கே.. வாயை திறந்து பேசுங்க விஜய்.. அண்ணாமலை அட்வைஸ் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
"எங்கிட்ட 300 ஓட்டு இருக்கு"..விசிக வேட்பாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த காங்கிரஸ் நிர்வாகி.. சர்ச்சை -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா












Click it and Unblock the Notifications