தினகரன் அதிமுகவின் உறுப்பினரே அல்ல : இரட்டை இலை வழக்கில் எடப்பாடி நச் ரிப்ளை

Subscribe to Oneindia Tamil
  ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை | Oneindia Tamil

  சென்னை : இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

  அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து, டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது.

   Edappadi Palaniswamy filed petition on Delhi HighCourt

  அதன்படி இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், அனைத்து ஆவணத்தையும் ஆய்வு செய்து தான் தேர்தல் ஆணையம் எங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உள்ளது.

  டி.டி.வி தினகரன் அதிமுகவின் உறுப்பினரே அல்ல. அவர் இரட்டை இலைக்கு எந்த விதத்திலும் உரிமை கோர முடியாது.

  இரட்டை இலை தொடர்பான வழக்கிற்கு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தை தான் அணுகி இருக்க வேண்டும். எனவே, இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Edappadi Palaniswamy filed petition on Delhi HighCourt Regarding Two Leaves Symbol Case. Earlier TTV Dhinakaran filed plea that Two Leaves symbol should be given to Him.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற